அந்த ஒரு நிமிடம்...
அவள்...
என்னை பார்த்துக் கொண்டே நகரும்-அந்த ஒரு நிமிடம்
என் கண்கள் குளிரும், வயிரும் நிரயும், மூளையோ மங்கும்!
ஆம், சிற்றுண்டி உணவக வாயில்களே,
வகுப்புகளின் முகப்புகலாயின!
பின் ஒரு நாள்...
அந்த ஒரு நிமிடத்தில்; அவளது பார்வையோ தடம் மாறின,
எனது கால்களோ தடுமாறின
தலைகனத்துடன் திரும்பினேன் பின்னால்,
பல ஆண்களின் பார்வை எனக்கு முன்னால்!
சிந்தித்தேன்...
தினம் ஒரு நிமிடம் எனக்கு அன்று,
பலருக்கும் ஒரு நிமிடம் இன்று,
என் கனவிலோ எங்கள் வாழ்க்கை அன்றொரு வருடம்!
அவர்களது கனவில் இன்று அவள் எத்தனை வருடம்!
ச்சீ.. இந்த பழம் புளிக்கும்...
கண்களை ஊனமாக்க நினைத்தேன்,
கனவுகலை புதைக்க முயற்சித்தேன்,
புத்தியை தீட்ட திட்டமிட்டேன்,
அந்த ஒரு நிமிடத்திர்க்காக!
அந்த ஒரு நிமிடம்...
அவளை பார்க்க கூடாது
என்று தான் நினைக்கிறேன்-ஆனால்
அதை கூட மறந்து விடுகிறேன்-அவள்
என்னை பார்க்கும் போது!
glitter-graphics.com
glitter-graphics.com