Football , Music and cricket
தமிழா நீ தமிழில் பேசு....................................................... கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ
கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே!;
உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ
உணர்விழந்து மறப்பதுதான் முறையோ?
தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப் பேசிப் பழகிவிடு தமிழா! அகத்தியனார் தந்தமொழி தமிழாம் - இச்சகத்தினிலே சிறந்தமொழி அதுவாம்; அகத்தினிலே தவழவிடு தமிழை! - அதுதரும் சுகத்தினிலே திளைத்துவிடு தமிழா! நாட்டில் பலமொழிகள் இருக்கு - அதிலேநம் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு! வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ விரும்பித் தமிழ்பேசு தமிழா! மூத்த மொழியென்று சொல்வார் - அதனைநம் வீட்டு மொழியாக்கிக் கொள்வோம்; மூத்த குடிமக்களோடு நாம் தமிழில் உரையாடி மகிழ்வோம்! தமிழை அமுதென்று சொன்னார் - நீ தமிழைப் படித்துப்பார் புரியும்! தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன் கவிதை படித்துப்பார் தெரியும்! வார்த்தை வளமிகுந்த தமிழை - நாம் வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்! வழக்கம் மாற்றிக்கொண்டால் - சொற்கள் வழக்கொழிந்து போகும்
Comentarios para hi5
.e 89