Title

body
 
xxx of yyy characters
INTERNATIONAL TAMIL NATIONAL FRIENDS

Watch this Topic   watch
Messages 

1-2 of 2

Close Topic

Reason

Message



 
Topic: பிரான்ஸ் தமிழர்களின் விடுதலைக்கான உங்கள் ஆதரவு ?
பிரெஞ்சுப் போலீசினால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் 15 தமிழர்களை விடுவிக்கக் கோரும் இவ் விண்ணப்பத்தில் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இவ் விண்ணப்பம், பிரான்ஸ் அரசாங்கத்தைச் சேர்ந்த பின்வருவோருக்கு எமது கையொப்பங்களுடன் அனுப்பப்படும்.

François FILLON
Premier ministre

Michèle ALLIOT-MARIE
Ministère de l'Intérieur

Bernard KOUCHNER
ministre des Affaires étrangères et européennes

Rachida DATI
Garde des Sceaux, ministre de la Justice

-------------

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html


காற்றுக்கென்ன வேலி ..
------------------------------------
Dec 1, 2007
11:19 AM
really encouragable matter you are speaking ,gajan.
try to register me in mentioned website.take care
Posted by ambush 
Jan 6, 2008
1:44 AM
1-2 of 2


Select Language